
தமிழ்த்துறை 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கலை மற்றும் அறிவியல், வணிகம், மேலாண்மை மற்றும் கணினி அறிவியல் மற்றும் தொடர்புடைய துறைகளுக்கான பகுதி ஒன்றின் கீழ் மொழிப்பாடமாக இந்தத்துறை தமிழை வழங்குகிறது. படைப்பாளர்களாக, திறனாய்வாளராக, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் சார்ந்தவற்றில் திறமைமிக்கவர்களாக மாணவர்களின் வளர்ச்சிக்கு தமிழ்த்துறை உறுதுணையாக உள்ளது. தமிழ்த்துறை ஆசிரியர்கள் மாணவர்களிடையே இலக்கிய ஆர்வத்தை தூண்டுதல், தனித்திறனை வெளிக்கொணர்தல், படைப்பாற்றல் திறனை வளர்ப்பது மற்றும் மனித விழுமியங்களை கற்பித்து அறவழியில் செல்ல முழு மனதுடன் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்த்துறையின் பாடத்திட்டம் வாழ்க்கையின் மதிப்புகளைக் கற்று மாணவர்களுக்கு காலச் சூழலுக்கேற்ப வாய்ப்புகளை வழங்குககிறது மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்துகிறது. மேலும் தமிழ்த்துறையின் பாடத்திட்டம் மாணவர்களிடையே இலக்கிய அறிவை நன்கு விரிவாக்கும் விதத்திலும், சமூகம் பற்றிய அறிவை வளர்க்கும் வகையிலும், பேச்சுத் திறமையை மேம்படுத்தும் ககையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்துறை மாணவர்களை தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள் போன்ற பல்வேறு ஊடகத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கு பல திறன் சார்ந்த பயிற்சிகளை வழங்குகிறது. மேலும் பண்டைய மக்களின் வரலாறு, கலைகள், பண்பாடுகளை அறியும் வகையிலும், பாரம்பரிய கலைகளை மீட்டுருவாக்கம் வகையிலும் தமிழ்த்துறை செயல்பட்டு வருகிறது.
கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மாணவர்களின் மொழி அறிவைப் பெருக்கவும், அவர்களின் படைப்பு மற்றும் கற்பனைத்திறன்களை வெளிக்கொணர்ந்து நேர்மறையான அணுகுமுறைகளை வளரச்செய்யவும், மாணவர்களின் ஆளுமையைப் போட்டி நிறைந்த உலகில் சுய அடையாளத்தோடும் தன்னம்பிக்கையுடனும் வளர வழி செய்கிறது.
மொழிப்பற்றை மாணவர்களிடையே ஊக்குவித்தல்.
மாணவர்களை பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றல் திறன் மிக்கவர்களாக வளர்த்தெடுத்தல்.
தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை மற்றும் இலக்கிய இலக்கண வளம் ஆகியவற்றை மாணவர்கள் உணரச்செய்தல்.
உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான தமிழர் நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் தமிழ் மொழியின் பங்களிப்பை எடுத்துரைத்தல்.
சமூகம் பற்றிய சிந்தனைகளைத் தமிழ்ப் படைப்பிலக்கியங்கள் மூலம் ஏற்படுத்துதல்.
புதுக்கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைப் வாசிக்க வைத்தல், எழுத வைத்தல். மேலும் நூல்களைத் திறனாய்வு செய்யவும், விமர்சனம் செய்யவும் பயிற்சியளித்தல்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் போட்டித்தேர்வு மையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்தல். மேலும் கலைகள் மற்றும் இலக்கியம் மீதான ஆர்வத்தை மாணவர்களிடம் ஏற்படுத்துதல்
மாணவர்களின் வாசிக்கும் ஆற்றலை ஊக்குவிக்கவும், தமிழ் இலக்கியத்தோடு தொடர்புடைய பிற நூல்களையும் மாணவர்கள் சுயமாக கற்று உணரச்செய்தல். மேலும் இலக்கியம் சார்ந்த வேலைவாய்ப்புகளைப் பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.
மாணவர்கள் பிழையில்லாமல் எழுதுவதற்கும், பேசுவதற்கும், கருத்துப்பரிமாற்றத்திற்கும் பயன்பாட்டு இலக்கணம் உதவுகின்றன என்பதை அறியச் செய்து பயிற்சியளித்தல்.
PEO1: தமிழ் இலக்கிய வளர்ச்சியை அறிந்து கொள்ளுதல்
PEO2: தமிழ் இலக்கிய வரலாற்றினைக் கால வரிசைப்படி அறிதல்
PEO3: மொழிபெயர்ப்பின் அவசியம் அறிதல்
PEO4: மொழி வளர்ச்சிக்கான பயன்பாட்டு இலக்கணத்தை அறிதல்
PEO5: பேச்சுத்திறனை மேம்படுத்துதல்
PEO6: தன்னம்பிக்கை மற்றும் அறப்பண்புகளை வளர்த்தல்
PEO7: படைப்பாற்றல் திறன் மற்றும் படிக்கும் ஆர்வத்தை வளர்த்தல்
PEO8: பண்பாட்டுக் கல்வியினை அளித்தல்
PEO9: வரலாற்று செய்திகளை நினைவூட்டல்
PE1O: பாரம்பரிய கலைகள் மற்றும் பண்பாட்டை அறிந்து கொள்ளுதல்.
PO1: தாய்மொழியாம் தமிழ்மொழியின் வளம், திறம், வரலாறு, உயர்வு, சிறப்பு போன்றவைகளை கல்லாதவரும் அறியும் வகையில் செம்மொழியின் மாண்பு எந்நாளும் செழிப்பதற்கு பல பட்டிமன்றம், மாநாடு, கருத்தரங்கு நடத்தி தமிழின் சிறப்பை அறியச்செய்வார்கள்.
PO2: இன்றைய தகவல் தொழில்நுட்பவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ப சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற உயிர்த்துடிப்புடன் தமிழ்மொழி தழைத்துச் செழித்திட தமிழை வலைதளங்களில் உலவ வழிவகைச் செய்வர்.
PO3: மாணவர;கள் நல்ல பேச்சாளர்களாகவும், கவிஞர்களாகவும், பத்திரிக்கை ஆசிரியராகவும், கதையாசிரியராகவும், நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும், குறும்படத் தயாரிப்பாளராகவும் அந்தந்த துறையில் ஆளுமை மிகுந்தவர்களாகத் திகழ்வார்கள்.
PO4: உலகளாவிய நோக்கில் ஒற்றுமை உணர்வினை உருவாக்கி தமிழின் சிறப்பை உலகறியச் செய்வார்கள்.
PO5: நடைமுறை வாழ்வியலுக்குத் தேவைப்படும் மொழிபெயர்த்தல் துறையில் சிறந்தவர்களாகவும் மற்றும் உள்ளூர் வரலாற்றை அறிந்து அதன் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வார்கள்.